மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதுவரை தளபதி விஜயின் திரைப்பயணத்திலேயே எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளிவர இருக்கும் இந்த லியோ திரைப்படத்தை உலகம் முழுக்க கிட்டத்தட்ட 25,000 முதல் 30,000 திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெளிநாடுகளில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு ஆறு வாரங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டதால் ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸிலும் லியோ தன் சாதனையை தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நமது திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு உரையாடிய போது பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "ஒரு குறிப்பிட்ட திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தை விட அதிக வசூல் செய்யவில்லை. ஏனென்றால் ஜெயிலர் திரைப்படம் தற்போது ஒரு பெரிய ஸ்டாண்டர்ட் செட் செய்து விட்டது. அதன் பிறகு வேறு ஒரு படம் அந்த ஸ்டாண்டர்டை செட் செய்யும் இப்போது எல்லாமே ஒரு போட்டி ஆகிவிட்டது. அந்தப் போட்டி குறித்து எப்போதாவது உங்களுடைய தயாரிப்பாளரிடம் இருந்து உங்களுக்கு ஏதாவது வந்திருக்கிறதா இல்லை நாம் இதை தாண்டியே ஆக வேண்டும் அந்த மாதிரி, தயாரிப்பாளர் என்று மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்தும்... ஏதாவது கேட்டிருக்கிறார்களா உங்களிடம்?" எனக் கேட்டபோது,
“சுற்றி இருப்பவர்கள் நிச்சயமாக கேட்பார்கள் ஏனென்றால் நமக்கு தெரியும் என்ன படம் என்ன கலெக்ஷன் செய்திருக்கிறது என்பதை பற்றி… நான் எப்போதும் வசூல் குறித்து பெரிதாய் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் இந்த படம் அந்த படத்தை முறியடிக்கிறதா என்பதை தாண்டி அதற்கு அடுத்த வாரம் வரக்கூடிய ஒரு படம் முறியடிக்க தான் போகிறது. அதன் பிறகு வரக்கூடிய படங்கள் அதை முறியடிக்க தான் போகின்றன. இதை செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எல்லாம் இல்லையே. படத்திற்காக கையெழுத்திடும் போது அது அக்ரிமெண்டில் இல்லையே. அவர்களுக்கு தேவையானது ஒரு ஹிட் படம் தான். இப்போது கூட தயாரிப்பாளர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொல்லிக் கொண்டிருந்தார். நான் இதை நகைச்சுவையாக தான் சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரிடமும் அதைத்தான் சொன்னேன் தயாரிப்பாளர் சொன்னார், “லோகேஷ் பார்த்துக் கொள்ளுங்கள் அதைவிட இது அதிகம் கலெக்ட் பண்ணியாக வேண்டும் ஜெயிலர் விட வசூல் செய்ய வேண்டும் மீம் எல்லாம் பார்த்தீர்களா?” என்றார். பதிலுக்கு, “ஆமாம் சார் பார்த்தேன் இன்னொரு மீம் கூட பார்த்தேன் நீங்கள் எனக்கு ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுப்பது போல” என சொல்லி அவருக்கே திருப்பி அனுப்பி வைத்தேன். அவ்வளவு நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு போவது தான் இது. கலெக்ட் பண்ணியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எல்லாம் இங்கே இல்லையே..” என பதில் அளித்தார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.