இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த ஆண்டு(2022) வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரமாக மாறும் நடிகர் சூர்யாவின் இதுவரை வெளிவராத ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திர நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து முதல்முறையாக தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் சூர்யா கைகோர்க்கிறார்.

தற்போது தளபதி விஜயின் 67வது திரைப்படமாக உருவாகும் அக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமான தயாராகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று 500 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபீஸில் வசூலித்தது. உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், செம்பன் வினோத் ஜோஸ், சந்தான பாரதி, இளங்கோ குமரவேல், காயத்ரி சங்கர் என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் தனது மாஸான இசையால் அசத்தியிருந்தார். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு(2022) மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் சில நிமிடங்களே தோன்றிய நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரள வைக்க ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்குகள் அதிர்ந்தன. விக்ரம் படத்திற்கு பிறகு தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் லோகேஷ் கனகராஜ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் எனும் LCU ரசிகர்களுக்கு அறிமுகமாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், விரைவில் தயாராக இருக்கும் கைதி 2 திரைப்படத்திலும் ரோலக்ஸ் கதாபாத்திரம் கட்டாயமாக இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விரைவில் சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது கடந்த சனிக்கிழமை ஜூன் மூன்றாம் தேதியோடு விக்ரம் திரைப்படம் ரிலீஸாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #1YearOfVikram என கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விக்ரம் திரைப்படத்திற்காக ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு மாறும் நடிகர் சூர்யா, தேள் டாட்டுவை வைத்துப் பார்க்கும் அட்டகாசமான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ட்ரெண்டாகும் அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ…