உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.தினசரி நடக்கும் படப்பிடிப்பின் மூலம் பயன்பெறும் துணை நடிகர்,நடிகைகள்,நாடக நடிகர்,நடிகைகள்.மூத்த நடிகர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவவேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த கோரிக்கையை பல நடிகர்கள் உதவி செய்துள்ளனர் என்று நடிகர் சங்கம் சார்பில் உதவிய நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
#Nasser, #karthi and many others contributed to #SIAA #Nadigarsangam who are facing shutdown due to #Corona Virus out break. #coronavirusindia #againstcorona pic.twitter.com/CXNkGYXGBf
— NadigarSangam PrNews (@NadigarsangamP) April 5, 2020