லியோ படத்தில் இடம் பெற்றுள்ள “நா ரெடி” பாடலுக்கு தளபதி விஜயின் ரியாக்ஷன் என்ன என்பது குறித்து பாடலாசிரியர் விஷ்ணு எடவன் பேசியுள்ளார். நாளுக்கு நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அடுத்த சில வாரங்களில் மொத்தம் படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் ரலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்க மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 67வது படமாக தற்போது லியோ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். லியோ படத்தில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படம் துவங்குவதற்கு முன்பிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்த நிலையில் அறிவிப்பு வீடியோ வந்த பிறகு இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியது. முன்னதாக நேற்று தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று மாலை லியோ திரைப்படத்தின் முதல் பாடலான "நா ரெடி" பாடலும் வெளிவந்து பயங்கர ட்ரெண்ட் ஆனது. இந்த பாடலை விக்ரம் திரைப்படத்தில் “போர் கண்ட சிங்கம்” மற்றும் “விக்ரம் டைட்டில் ட்ராக்” பாடல்களை எழுதிய விஷ்ணு எடவன் எழுதியிருந்தார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த “நா ரெடி” பாடலின் பாடலாசிரியர் விஷ்ணு எடவன் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பாடலை பார்த்த பிறகு தளபதி விஜயின் ரியாக்ஷன் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில்,

“நான் எழுதிக் கொடுத்த பிறகு லோகேஷ் அண்ணா தான் அவரிடம் கொடுத்திருந்தார் பாடல் வரிகளை, நான் கொடுக்கவில்லை. அவருக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு நேரில் சந்தித்த போது, அவராக தான் கூப்பிட்டு சொன்னார். “சூப்பரா இருக்கு.. நல்லா இருக்குடா இது ஆரம்பம்.. நல்லா இருக்கு நான் ரெடி அண்ணன் தான் ரெடி ரொம்ப சூப்பரா இருக்கு… கடைசியில மீட்டர் சூப்பரா இருக்கு கொண்டாடி கொளுத்தணும் நல்லா இருக்கு… நல்லா எழுதற டா நீ” என கியூட்டா அழகா அவர் சொல்லிட்டு போய்விடுவார். அது நமக்கு பெரிதாக இருக்கும். அவருக்கு அது கேஷுவல்... எவ்வளவோ பேமென்ட் வாங்குவதை விட அந்த சிரிப்பு பேங்க் பேலன்ஸை ஏற்றி விடும். அந்த மாதிரி தான்…” என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட விஷ்ணு எடவனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.