சுமார் 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தவர் இன்னொசென்ட். காமெடி, குணசித்திர கதாபாத்திரம் என்று தனது பன்முக நடிப்பு திறமையை பல தாசப்தங்களாக கொடுத்து ரசிகர்களை உற்சாகப் படுத்தியவர் இன்னொசன்ட். மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர். தமிழில் ‘லேசா லேசா’ , ‘நான் அவளை சந்தித்த போது’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்மூட்டி மோகன் லால் ஜெயராம், துல்கர் சல்மான், பிரித்வி ராஜ், ஜெயசூர்யா, நிவின் பாலி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் இன்னசன்ட். 1970 தொடங்கி இன்று வரை திரையுலகில் அயாரது உழைத்து தனக்கான இடத்தை ரசிகர் மத்தியில் உருவாக்கினார். சிறந்த நடிப்பிற்கான கேரள அரசு விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற இவர் நடிகராக மட்டுமல்லாமல் மலையாள நடிகர் சங்க தலைவராகவும் பதிவி வகித்துள்ளார். மேலும் ஒருபடி மேல் சென்று லோக் சபா எம்பி யாகவும் பதவி வகித்துள்ளார்.
75 வயதான இன்னசென்ட் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல் குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னசென்ட் அவர்களுக்கு ஏற்கனவே தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு பின் சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்னசென்ட் அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் இன்னசென்ட் நேற்று இரவு காலமானார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் இன்னசென்ட் அவர்கள் கொரோனா தோற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாடது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் மறைவையடுத்து மலையாள திரையுலகமே மிகுந்த வருத்தமடைந்து ரசிகர்கள், திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் நடிகரும் இயக்குனருமான பிரித்வி ராஜ் சுகுமாரன், “சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான அத்யாயம் முடிந்தது” என்று குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மற்றும் துல்கர் சல்மான் அவர்கள் தனது இன்ச்டாகிராம் பக்கத்தில், “எங்கள் விண்மீன் கூட்டத்தில் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரத்தை இழந்தோம். நாங்கள் அழும் வரை எங்களை சிரிக்க வைத்தீர்கள். இப்போது எங்கள் உள்ளம் வலிக்கும் அளவு அழ வைத்தாய். காலத்தால் அழியாத எல்லாக் காலத்திலும் நீங்கள் மிக உயர்ந்த நடிகராக இருந்தீர்கள். அதையும் தாண்டி நீங்கள் அற்புதமானவர். நீங்கள் அனைவரும் இதயமாக இருந்தீர்கள். உங்களை திரையில் பார்த்த அனைவருக்கும் எனக்கும், நீங்கள் சந்தித்த அனைவருக்கும் ஒரு குடும்பமாக இருந்தீர்கள்நீங்கள். உங்களுடன் நெருங்கி பழகும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. என் தந்தையின் சகோதரனைப் போல. சுருமிக்கும் எனக்கும் மாமா மாதிரி. உங்களை குழந்தை பருவத்திலிருந்து பார்த்த நான் உங்களுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வளர்ந்தேன். நீங்கள் அன்றும் இன்றும் எங்களைக் கதைகளால் ஒன்றினைத்தீர்கள்.. எப்பொழுதும் உங்களுடன் இருக்கு மக்களைக் கூட்டிச் செல்வதும் எப்போதும் அவர்களை உயர்த்தும். என் எண்ணங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. என் எழுத்தைப் போலவே. ஐ லவ் யூ டியர்லி இன்னசென்ட் மாமா. ஆழ்ந்த இரங்கல்கள்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.