தனக்கென மாபெரும் ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டுள்ள நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக அஜித் குமார் - H.வினோத் - போனிகபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. சில தினங்களுக்கு முன்பு வெளியான துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அஜித் குமாருடன் இணைந்து முன்னணி மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கும் துணிவு திரைப்படத்தில் ராஜதந்திரம் வீரா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைக்கும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில் நிலையில் இதர அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தொடர்ந்து தனது பைக் ரைடிங்கிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார் தற்போது தாய்லாந்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். அந்தவகையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் பைக் ரைடிங் செய்யும் அஜித்குமாரின் புகைப்படங்கள் தற்போது தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சவாலான சாலைகளில் அஜித்குமார் பைக் ரைடிங் செய்யும் வைரல் புகைப்படங்களை கீழே உள்ள லிங்க்கில் காணலாம்.
#NoGutsNoGlory pic.twitter.com/ypUxjyQ9NC
— Done Channel (@DoneChannel1) October 13, 2022