மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து புது ஜானரில் ஒரு ஹேங்கவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய்சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கா.பெ. ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக முக்கிய ரோலில் நடித்துள்ளார். விருமாண்டி இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
சமுத்திரக்கனி, ராம், வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் பாராட்டி பதிவு செய்திருந்தார். பின்னணி இசைக்கான பணிகளைத் தொடங்குகிறேன். அறம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் புகழாரம் சூட்டினார்.
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், லாக்டவுனில் பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதை பார்க்க முடிகிறது. அதே சமயம், பெரிய பட்ஜெட் படங்களும் இதில் வெளியாகவுள்ளதென வதந்திகள் வருவதையும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இதுபோன்று பல படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.
இந்நிலையில் க.பெ. ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி-ல் வெளியாகிறது என போஸ்டர் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கே.ஜெ.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் பதிவு ஒன்றை செய்துள்ளது. அதில் இச்செய்தி முற்றிலும் தவறு என்றும், இன்னும் பேச்சு வார்த்தையில் தான் உள்ளோம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை திரை ரசிகர்கள் காத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் பற்றியும் தெளிவான பதிவு செய்துள்ளனர் தயாரிப்பு நிறுவனம். சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் திரைப்படத்தையும் SK ப்ரோடக்ஷன்ஸ் உடன் இணைந்து KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
UNTRUE. We’re in talks with all major OTT players but we haven’t zeroed in yet.
— KJR Studios (@kjr_studios) August 25, 2020
Please await official confirmation on our films directly from us! 🙏🏽#KaPaeRanasingam #Dikkiloona https://t.co/S0A5ztFD6N