2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையா
இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.ஆனால் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் இயக்குனரும்,நாயகனும் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ராக்கி பாயை பெரிய திரையில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .
படத்தின் நாயகன் யாஷிற்கு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததது.தனது மகன் குறித்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா இருவரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.தற்போது மகனின் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் யாஷ்.நடக்கமுடியவில்லை என்றாலும் இந்த பாடலை கேட்டவுடன் எழுந்து நின்று ஆட்டம் போடுகிறான் என்று தெரிவித்துள்ளார் யாஷ்.அந்த வீடியோவில் மகனை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியும் உள்ளார் யாஷ்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்