தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றுள்ளார்.இதனை தொடர்ந்து பென்குவின்,தலைவர் 168 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இது தவிர தமிழ் தெலுங்கில் உருவாகிவரும் படத்திலும் நடித்து வருகிறார்.நதியா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படம் மார்ச் 6ஆம் தேதி வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர்.தற்போது இந்த படத்தின் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
It is official!! Keerthy Suresh @KeerthyOfficial 's #MissIndia will hit the screens on April 17th 2020 as the first Family Entertainer of this summer! Gear up to see our National Award winning actress like never before :) pic.twitter.com/bx2TD434je
— Mahesh S Koneru (@smkoneru) February 19, 2020