தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருது வாங்கிகொடுத்தது.இதனை அடுத்து இவர் நடித்த அண்ணாத்த,சர்க்காரு வாரிப்பாட்டா,சாணி காயிதம்,வாஷி உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இதனை தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் வேதாளம் ரீமேக்,நானி நடிக்கும் தசரா உள்ளிட்ட சில முன்னணி படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்கும் கீர்த்தி , தனி ஹீரோயினாகவும் நடித்து அசத்தி வருகிறார்.
இவர் நடித்த காந்தாரி என்ற ஆல்பம் பாடல் பிப்ரவரி மாதம் வெளியாகி பலரிடமும் பாராட்டுகளை பெற்று வந்தது.பல ரசிகர்களும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் போன்றவற்றை பதிவிட்டு வந்தனர்.இந்த பாடல் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது.
இந்த பாடல் வீடியோ தற்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.இந்த ஆல்பம் பாடலின் மியூசிக் வீடியோ யூ டியூப்பில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரிய சாதனை படைத்துள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்
2️⃣5️⃣ MILLION hearts fluttering to #Gandhari! 💃❣️
— Sony Music South (@SonyMusicSouth) August 13, 2022
➡️ https://t.co/jBfvgNwvbZ@KeerthyOfficial @BrindhaGopal1 @pawanch19 @TheRoute @Jagadishbliss @Ananyabhat14 @dop_harish #SuddalaAshokTeja#GandhariGroove pic.twitter.com/2zYnA3S3LV