தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடலாசிரியரும் சிறந்த எழுத்தாளருமான கவிப்பேரரசு வைரமுத்து தேசிய விருதுகள், மாநில விருதுகள், பிலிம்ஃபேர்,SIIMA என பல விருதுகளை பெற்றவர். கவிப்பேரரசு வைரமுத்து இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேரளாவில் ONV.குரூப் கலாச்சார குழுமத்தின் உயரிய ONV இலக்கிய விருது இந்த ஆண்டு கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் அந்த விருது குறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் ONV.குரூப் கலாச்சார குழுமம் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு விருது கொடுப்பதில் மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதனை அறிந்த கவிப்பேரரசு வைரமுத்து அந்த விருதை திருப்பி அளிப்பதாக ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். அதில்,
வணக்கம், கேரளாவின் பெருமைமிக்க விருதுகளில் ஒன்றான ONV கலாச்சார விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ONV குழுமம் அறிவித்தது நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சில பேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன்.இது என்னையும் கவிஞர் ONV.குரூப்பையும் சிறுமை படுத்துவதாயாகுமோ என்றும், நடுநிலை மாறாத நடுவர் குழுவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படும் கூடாது என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைக்குரிய இந்த விருதை தவிர்க்கவே விரும்புகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நான் மிக மிக உண்மையாக இருக்கிறேன் என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை தெளிவோடும் அன்போடும் எடுத்திருக்கிறேன். ONV இலக்கிய விருதை ONV கல்ச்சுரல் அகாடமிக்கு நான் திருப்பி அளிக்கிறேன்.
என தெரிவித்துள்ளார்
மேலும் இந்த விருதுடன் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ள 3 லட்ச ரூபாய் பரிசு தொகையை கேரள மாநிலத்தின் கொரோனா நிவாரண பணிகளுக்காக கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்த கவிப்பேரரசு வைரமுத்து தன் சார்பில் 2 லட்ச ரூபாயை கேரள அரசாங்கத்தின் கொரோனா நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் மலையாள மொழிகளுக்கு இடையிலான சகோதரத்துவம் தழைக்கட்டும் இந்த விருது அறிவிப்பை கேட்டு என்னை பாராட்டிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி
என தெரிவித்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
விருதைத் திருப்பித் தருகிறேன்...#ONVaward https://t.co/1ELyjBgnu6
— வைரமுத்து (@Vairamuthu) May 29, 2021