தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்த எம்ஜிஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பலரும் நடிக்க விரும்பிய பொன்னியின் செல்வனின் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகர் கார்த்தி, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
வல்லவரையன் வந்தியத்தேவனாக ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த நடிகர் கார்த்தி, அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அட்டகாசமான இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸானது.
இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ள சர்தார் திரைப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், சர்தார் திரைப்படத்திலிருந்து இன்கி பின்கி பான்கி பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த லிரிக் வீடியோ இதோ...