தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் தரமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் கார்த்தி சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார்.
வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியின் நடிப்பை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நடிகர் கார்த்தி அடுத்ததாக, குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சர்தார்.
பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21-ம் தேதி ரிலீசாகவுள்ள சர்தார் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ள நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோரும் இணைந்து நடித்துள்ள சர்தார் திரைப்படத்தை ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்யும் சர்தார் படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சர்தார் திரைப்படத்திற்கு சென்சார் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
It’s official - #Sardar certified with a
— Prince Pictures (@Prince_Pictures) October 13, 2022
U/A 🤩🌟
All set for a big theatrical release on October 21st! #SardarDeepavali 🔥@Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @RaashiiKhanna_ @lakku76 @rajishavijayan @ChunkyThePanday @george_dop pic.twitter.com/ycEyfwaVGK