தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகத் தொடர்ந்து படத்திற்கு படம் நல்ல கதைக் களங்ளையும் பலவிதமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து தரமான நடிகராக வலம்வரும் நடிகர் கார்த்தி, அடுத்ததாக குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்த நடிகர் கார்த்தி, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை போலவே அனைத்து ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை அடித்தார்.
இதனிடையே இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் அட்டகாசமான பல கெட்டப்களில் இரட்டைவேடத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சர்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ள சர்தார் திரைப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இன்று அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீசானது.இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் FDFS முதல் காட்சியை ரசிகர்களோடு காண வந்த நடிகர் கார்த்திக்கு ரசிகர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அந்த வீடியோ இதோ…