போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை துவங்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா நாயகிகளாக நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாயகிகள் கொண்ட காதல் கதையாக இருப்பதால் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்கின்றனர் ரசிகர்கள்.
பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இப்படத்தின் டைட்டில் லுக் வீடியோ வெளியானது. இதைக்கண்ட பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார் என்ற செய்தி கலாட்டா செவிகளுக்கு எட்டியது. சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் கொடி பாலிவுட் வட்டாரத்தில் பட்டொளி வீசி பறக்கிறது. இதனால் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பாலிவுட் திசையிலும் காற்று பலமாக வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கி : 3வே லவ் ஸ்டோரி ...
ரசிகர்கள் : ஆர் யூ ஒகே பேபி ...