இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கங்கணா ரணாவத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தாக்கட். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த தாக்கட் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற தவறியதோடு பெரும் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் தயாராகி இருக்கும் தேஜஸ் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முன்னதாக இயக்குனர் & தயாரிப்பாளர் என புதிய அவதாரம் எடுத்துள்ள நடிகை கங்கனா ரணாவத் எமர்ஜென்சி திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரியான இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் பயோபிக் திரைப்படமாக எமர்ஜென்சி திரைப்படம் தயாராகி வருகிறது.

முன்னதாக தமிழில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படத்திலும் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் தூம் மற்றும் தலைவி ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது படமாக தமிழில் கங்கனா ரனாவத் நடித்துவரும் திரைப்படம் சந்திரமுகி 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரை பயணத்தில் குறிப்பிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் சந்திரமுகி திரைப்படம் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பணக்காரன், மன்னன், உழைப்பாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி.வாசு பாபா திரைப்படத்திற்கு பிறகு சிறு இடைவெளி எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக சந்திரமுகி திரைப்படத்தை இயக்கினார். அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படம் இன்றைய ஹாரர் காமெடி ட்ரெண்ட்டுக்கு அடித்தளம் போட்ட திரைப்படம் என்றும் சொல்லலாம்.

அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் நம் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தன. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ள நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு பிரமிக்க வைக்கும் மேக்கப் போடும் புகைப்படங்கள் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியானது. ட்ரெண்டாகும் அந்த புகைப்படங்கள் இதோ…