ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளனர். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து வெளியான பாடல்களும் ஹிட்டடித்து வருகின்றன. இதனிடையே ரிலீசுக்கு முன்பான விக்ரம் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் முழுவீச்சில் யற்போது நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசனிடம் தளபதியுடன் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு "தளபதியின் கால்ஷீட் கிடைத்ததும் நடக்கும்" என கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். தளபதி விஜய் குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…

Ulaganayagan @ikamalhaasan about doing a movie with Thalapathy @actorvijay during his #Vikram promotions in Malaysia pic.twitter.com/w8B73AC3w3

— Vijay Fans Trends (@VijayFansTrends) May 29, 2022