உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன்.இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.இரட்டை வேடங்களில் கமல் நடித்து அசத்திய இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தினை தயாரித்து வந்தனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் 2 வருடங்களாக தடைப்பட்டிருந்தது.இந்த படத்தினை தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் வேலைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளன.
காஜல் அகர்வால்,சித்தார்த்,ப்ரியா பவானி ஷங்கர்,ரகுல் ப்ரீத்,பாபி சிம்ஹா,குரு சோமசுந்தரம்,மனோபாலா,சமுத்திரக்கனி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் வேலைகள் தொடங்குவது குறித்து ஒரு புது போஸ்ட்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங்கும் 2 வருடங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது.இதுகுறித்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பூஜையுடன் மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்கில் இயக்குனர் ஷங்கர்,பாபி சிம்ஹா,ரெட் ஜெயண்ட் முக்கிய பிரபலங்கள் மற்றும் இந்தியன் 2 முக்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.
We’re all excited!
— Red Giant Movies (@RedGiantMovies_) August 24, 2022
Wishing #Ulaganayagan @ikamalhaasan, @shankarshanmugh sir & the whole team all the luck and love for commencing the shoot of #Indian2 today. 🎊🥁@LycaProductions @Udhaystalin @RedGiantMovies_ @anirudhofficial pic.twitter.com/rZkfNHs4Ck