இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற திரை கலைஞராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 திரைப்படத்தில் நடிக்கிறார். சில காரணங்களால் தடைபட்டிருந்த இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றில் ஆல்டைம் ரெக்கார்டாக 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், செம்பன் வினோத் ஜோஸ், ஜாஃபர், குமரவேல், சந்தானபாரதி, மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்களில் வந்து மிரட்டினார் நடிகர் சூர்யா.
அனிருத்தின் பாடல்கள் & பின்னணி இசையும் அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களின் அதிரடியான ஆக்சன் காட்சிகளும் விக்ரம் திரைப்படத்தை ரிப்பீட் மோடில் ரசிகர்களை பார்த்து ரசிக்க வைத்தது. இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் 100 நாட்களை கடந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
#100DaysofVikram #VikramRoaringSuccess@Udhaystalin @Dir_Lokesh @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/om38SguAkl
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2022