இந்திய சினிமாவின் தலை சிறந்த நடிகரும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞருமான உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் தற்போது நடித்து வருகிறார்
மேலும் விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போது தனது KH- ஹவுஸ் ஆஃப் கதர் ஆடை நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து KH- ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் தொடக்கத்திற்காக அமெரிக்காவின் சிக்காகோவிற்க்கு பயணம் செய்தார்.
அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனுக்கு லேசான இருமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் கமல்ஹாசன்.
இந்நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. இந்த அறிக்கையில்,
நுரையீரல் பாதிப்பு மற்றும் காய்ச்சல் காரணமாக ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது .
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#NEWSUPDATE | நடிகர் கமல்ஹாசன் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.#KamalHaasan #COVID19 #Coronavirus pic.twitter.com/7qdctW0HYo
— Galatta Media (@galattadotcom) November 22, 2021