பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறு தேதிக்கு மாற்றப்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் திரைக்கு வரவிருக்கும் படங்களில் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று பேசப்படுகிறது. ரசிகர்களின் பாதுகாப்பு காரணமாக விரைவில் ரிலீஸ் தேதியுடன் வருவதாக படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர்.