ரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , ஜுங்கா, காஷ்மோரா போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் கோகுல். இந்த லாக்டவுனில் இவர் இயக்கத்தில் புதிதாக உருவாகவிருக்கும் படம் கொரோனா குமார்.
கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் சுமார் மூஞ்சி குமார். அந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவும் தற்போது நிலவும் சூழலையும் சேர்த்து புதிய படத்திற்கு கொரோனா குமார் என்று பெயர் வைத்திருக்கிறார். உலகம் முழுவதும் கொரோனா அதன் பாதிப்பை காட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கொரோனா குமார் என்று டைட்டில் வைத்து படத்திற்கான வேலைகளை துவங்கியுள்ளார் கோகுல்.
சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதியின் மகனான சூர்யா விஜய்சேதுபதி நடிக்கிறார் என்றும், விஜய்சேதுபதி இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகளும் ஆன்லைனில் அதிகமாக பரவி வருகிறது. இதுகுறித்த தெளிவான செய்தி இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் சாங் அருமையாக வந்துள்ளது என இசையமைப்பாளர் சித்தார்த் விபினை பிரபல இயக்குனர் ஜான் மகேந்திரன் பாராட்டியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், என்ன ஜி பப்பாளி பழம் மாதிரி இருந்துகிட்டு இப்படி பட்டய கிளப்புறா மாதிரி டைட்டில் சாங் போட்டு இருக்கீங்க....அய்யயோ...தியேட்டர் கிழிஞ்சிரும்...கொரோனா குமார் கமிங் ஜி என பதிவு செய்துள்ளார். ஒரு வழியாக பாடல் பற்றிய அப்டேட் வந்துவிட்டது என மகிழ்ச்சியாக உள்ளனர் ரசிகர்கள்.
இயக்குனர் ஜான் மகேந்திரன் தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனர். தளபதி விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியவர். இன்று வரை ரசிகர்கள் விரும்பும் திரைப்படமாக இந்த படம் உள்ளது. இயக்குனர் கோகுலுடன் காஷ்மோரா படத்தில் வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ளார். கோகுலின் நெருங்கிய நண்பரான இவர், கொரோனா குமார் படத்தின் அப்டேட் குறித்து கூறியது மகிழ்ச்சியே. ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.
" என்ன ஜி பப்பாளி பழம் மாதிரி இருந்துகிட்டு இப்படி பட்டய கிளப்புறா மாதிரி டைட்டில் சாங் போட்டு இருக்கீங்க....அய்யயோ...தியேட்டர் கிழிஞ்சிரும்...கொரோனா குமார் கமிங் ஜி " @DirectorGokul @sidvipin @sathishoffl @Palanibalan1 #coronakumar pic.twitter.com/D1frJnSk6k
— johnMahendran (@johnroshan) July 8, 2020