இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த சிறந்த படைப்பாக வெளிவர தயாராகி இருக்கிறது விடுதலை பாகம் 1. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் இந்த விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட முதல் பாகம் வருகிற மார்ச் 31ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள விடுதலை திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
முன்னதாக நமது கலாட்டா வாய்ஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தனது துணைவன் சிறுகதை எந்த விதத்தில் இயக்குனர் வெற்றிமாறனை கவர்ந்தது இதனை படமாக்குவதற்கு வெற்றிமாறனுக்கு காரணமாய் அமைந்தது என்ன என்பது குறித்து பேசி உள்ளார். அப்படி பேசும் போது, "துணைவன் கதை எழுதும் போது அந்த காலகட்டம் 88..89.. 90களின் காலகட்டத்தில் நக்சலைட் இயக்கங்களின் கடைசி காலகட்டம். அந்த காலகட்டத்தில் நான் சந்தித்த விஷயங்கள் எனக்கு தொந்தரவுகள் அதுல இருந்து சில விஷயங்களை கதைகளாக எழுதி இருக்கிறேன். சில விஷயங்களை யாருக்காவது கடிதங்களில் எழுதி இருப்பேனனன், நண்பர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று. என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் அப்படி என்ன தொந்தரவு இந்த குறிப்பிட்ட துணைவன் கதையில் எனக் கேட்டபோது, "ரெண்டு தொந்தரவுகள் ஒன்று ஏறத்தாழ அந்த சமயத்தில் கேரளாவில் நான் மதித்த கம்யூனிஸ்ட் தலைவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, விலக்கப்பட்ட உடனே அவர் மீது எல்லா விதமான குற்றச்சாட்டுகளும் சுமற்றப்பட்டு, அவர்கள் சிறுமைப் படுத்தப்பட்டு, ஆளுமை படுகொலை செய்யப்பட்டதை பார்த்திருக்கிறேன். பின்னர் நக்சலைட்டுகளின் தலைமகன் என சொல்லப்படும் K.வேணு அவர் இன்றைக்கு ஒரு சாதாரண மனிதராக உன்னை பார்க்கிறேன். அவரை இழிவு படுத்தி எல்லாவிதமான அவதூறுகளையும் அவர் மீது சுமத்தி அவரை ஒழிக்கிறார்கள். இது ஒரு தொந்தரவு. இந்த கதைக்குள்ளேயே அந்த கதாபாத்திரம் சொல்லும் என் தோழர்களே என்னை அடிப்பார்கள் கொல்லுவார்கள் அதற்கு முன்பாக நீ என்னை கொள்வது எவ்வளவோ நல்லது... இது ஒரு தொந்தரவு தான் இந்த தொந்தரவிலிருந்து இன்று வரை நான் வெளியில் வர முடியவில்லை. அதேபோல் ஒரு கான்ஸ்டபிள், நான் முன்பே சொன்னது போல ஒரு கான்ஸ்டபிள் என்னிடம் சொன்னார் அவர் வாழ்நாளில் போட்ட முதல் செருப்பு என்பது போலீஸ் பூட்ஸ். ஆனால் உடனடியாக அவர் மாறி விடுகிறார்" என்றார். அது எப்படி அப்படி மாறுகிறார் என நாம் கேட்டபோது, "அது எப்படி மாறுகிறார் என்பது தான் அந்த கதையே… அதை நான் ஒரு வெர்ஷன் எழுதி இருக்கிறேன். வெற்றிமாறன் வேறு மாதிரி எடுத்திருக்கலாம் அதற்கு நீங்கள் வேறு ஒரு பதில் சொல்லலாம். உங்களுக்கே தெரியும் உங்களுடைய சொந்த சகோதரர் போலீஸில் இருந்திருந்தால் கூட நீங்கள் அவரை போலீசாக தான் பார்ப்பீர்கள். நீங்கள் அவரை போலீசாக இல்லாமல் பார்த்தீர்கள் என்றால் பிரச்சனைகள் மாட்டிக் கொள்வீர்கள்" என்று சொன்னார்.
மேலும் அவருடன் பேசியபோது, முதல்முறையாக ஒரு செருப்பு கூட போடாமல் நேரடியாக போலீஸ் பூட்ஸ் தான் என்றால் எவ்வளவு ஒடுக்கு முறைகளை தாண்டி அந்த இடத்திற்கு வந்திருப்பார்கள். அப்படி என்றால் அதை மக்களுக்கு தானே பயன்படுத்த வேண்டும்? எனக் கேட்ட போது, "அப்படி எந்த போலீஸ்காரரை இதற்கு முன்பு பார்த்தீர்கள். அவர்களுக்கான அந்த பயிற்சியாக இருக்கலாம் அல்லது அந்த அதிகாரமாக இருக்கலாம் கூட்டு அதிகாரம் என்ற ஒன்று போலீஸுக்கு இருக்கிறது. இது மாதிரி எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இது ஒரு எழுத்தாளருடைய ஆர்வம் தான். பரிவோடு இதை பார்க்க வேண்டும் என முயற்சி செய்திருக்கிறேன் அவ்வளவுதான். கதையில் அவ்வளவுதான் பண்ணியிருக்கிறேன். இதுதான் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை கவர்ந்திருக்கிறது. அவர் அதை விரிவாக்க முயற்சி செய்திருக்கிறார்" என எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தெரிவித்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…