ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹேக்டே இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்து அசத்தியிருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்திருந்தது.
இதனை தொடர்ந்து பூமி,ஜனகனமன,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.பூமி ஜெயம் ரவி நடித்து வரும் 25ஆவது படமாகும்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Home Movie Makers இந்த படத்தை தயாரித்துள்ளனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வருகின்றன,இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.
தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தை தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும்,தற்போ
#Bhoomi coming to your homes this Pongal 2021 only on @DisneyplusHSVIP 🙏🏼 God Bless! @immancomposer @dirlakshman @AgerwalNidhhi @AntonyLRuben @dudlyraj @Gdurairaj10 @theHMMofficial @sujataa_hmm @shiyamjack @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/gpe4zNiPJm
— Jayam Ravi (@actor_jayamravi) December 24, 2020