தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் ஆகிய பொன்னியின் செல்வன் என்னும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் அகிலன் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. இதனிடையே நடிகர் ஜெயம் ரவி தனது திரைப்பயணத்தில் 30-வது திரைப்படமாக நடிக்கும் #JR30 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது.
இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் #JR30 படத்திற்கு சைரன் என பெயரிடப்பட்டுள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் உடன் இணைந்து அனுஷா விஜயகுமார் சைரன் திரைப்படத்தை தயாரிக்கிறார்.
செல்வகுமார்.SK ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்யும் சைரன் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் சைரன் திரைப்படத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் அட்டகாசமான மோஷன் போஸ்டர் சற்று முன்பு வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் திருப்பிய சைரன் படத்தின் மோஷன் போஸ்டர் இதோ…