மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி, அடுத்தடுத்து இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் இறைவன், இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் ராஜேஷ்.M இயக்கத்தில் JR30 உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக ஓரிரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் பொன்னியின் செல்வன் நிஜத்தில் இப்படித்தான் இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் கணக்சிதமாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரும் தனது அண்ணனுமான இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து எம்.குமரன் S/o, மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன் என ஆறு படங்களில் அவரது இயக்கத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட ஜெயம் ரவி தனது திரைப்பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜா அவரது தந்தை எடிட்டர் மோகன் மற்றும் தாயார் ஆகியோர் கலந்துகொண்டு இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத பல சுவாரசிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இயக்குனர் மோகன் ராஜா அவர்களிடம், "என்றாவது ஜெயம் ரவி அவர்கள் பயங்கரமாக எமோஷனலாக இருப்பதை பார்த்து அவருக்கு தட்டி கொடுத்து பேசி இருக்கிறீர்களா சிறுவயதில் இருந்து இப்போது வரைக்கும்?" எனக் கேட்டபோது,

"அது ஒரு அண்ணன் எனும் போது அப்பா என்பதை விட அண்ணனாக நாம் இன்னும் கொஞ்சம் ஆறுதலாக சொன்னால் அவருக்கு இன்னும் கொஞ்சம் புரிதலாக இருக்கும் என நினைக்கிறேன் அந்த மாதிரி சில நினைவுகள் இருக்கிறது. என்ன பேசிக் கொண்டிருந்த இயக்குனர் மோகன்ராஜ் ஜெயம் ரவி அவர்களின், தோளில் தட்டி 'என்னடா... அது மாதிரியான நிகழ்வு எதையாவது ஞாபகப்படுத்து?'.." என சொல்ல,

"அதாவது முன்பெல்லாம் நான் தோல்வியடை படங்களுக்கு நிறைய மதிப்பு கொடுப்பேன். இப்போது கொடுப்பதில்லை. இப்போது அதில் இருந்து எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் என்றுதான் நினைக்கிறேன். முன்பெல்லாம் ரொம்ப மதிப்பு கொடுத்து இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஆகிவிட்டதே அப்படி ஆகிவிட்டதே என நினைத்து கொண்டிருப்பேன் உடனே அப்போது அண்ணன் நான் இருக்கிறேன் வா உனக்கு ஹிட்டு தானே வேண்டும் நான் இருக்கிறேன் வா இதற்கெல்லாம் வருத்தப்படாதே இப்போது நடிக்கும் படத்தை ஒழுங்காக நடி... திட்டு தானே வேணும் அதையெல்லாம் நாம் பார்த்துக் கொள்ளலாம் வா.. என்று நான் எப்போதெல்லாம் மிகக் கடினமாக உணர்கிறேனோ அப்போதெல்லாம் தூக்கிவிட்டது அப்பாவும் அண்ணாவும் தான்" என ஜெயம் ரவி தெரிவித்தார். சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் முழு வீடியோ இதோ…