சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மலையாள நடிகர் மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரெடின் கிங்க்ஸ்லி, ஆடுகளம் கிஷோர், விநாயகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகவிருக்கும் ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற முதல் பாடல் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். அனிருத் இசையில் இயக்குனரும் பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார். நடிகை தமன்னாவின் சோலோ பாடலாக உருவான இப்பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று தற்போது இணையத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்ட்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் இன்று கொண்டாடி வைப் செய்து கொண்டிருக்கும் ஜெயிலர் பட காவலா பாடலின் பாடலாசிரியரும் பிரபல இயக்குனருமான அருண் ராஜா காமாராஜ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பாடல் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் கலவையயான வரிகளில் பாடல் எழுதுவது குறித்து பேசுகையில். "எனக்கு கலவையான வார்த்தைகளில் பாடல் இருந்தால் ரொம்ப பிடிக்கும். அது எல்லோரிடமும் தொடர்பு படுத்த முடியும். மக்கள் அதை பாடுவார்கள். அப்போதான் அந்த பாடலுக்கு ஒரு உருவம் கிடைக்கும்.. எதுவுமே புரியாத ஒரு வரிகளை நான் எழுதி கொடுத்துட்டா அது மக்களிடம் போய் சேராது. அந்த உறவுடன் இருக்காது. முடிஞ்ச அளவு கலவையான வார்த்தைகளில் எழுதுவது நல்லதுனு நினைக்கிறேன். எனக்கு அவ்ளோ தான் தெரியும். மக்களுக்கு புரிஞ்ச மொழியில கொடுத்தாதான் அந்த பாடலுக்கு மரியாதை. அப்படி இல்ல புரியாத வார்த்தைகளில் இருந்தால் அந்த பாடல் வருவதற்கு வராமல் இருக்கறதே நல்லது." என்றார் அருண் ராஜா காமராஜ்.
அதை தொடர்ந்து அருண் ராஜாவினை கவர்ந்த பாடலாசிரியர் குறித்து பேசுகையில். "தனுஷ் சார் பாடல் வரிகள் எனக்கு புதுசா தெரியும் . உணர்வு பூர்வமா இருக்கும். உதாரணமா எதிர்நீச்சல் படத்துல 'விட்டில் பூச்சி விளக்க சுடுது.. விவரம் தெரியாம விளக்கும் அழுது' இது என்ன மாதிரியான சிந்தனை.. எனக்கு இன்னமும் இது எப்படி அவர் யோசிச்சுருப்பார். மேலும் திருச்சிற்றம்பலம் பாடல் வரிகள் எல்லாம் அருமையாக இருந்தது. தனுஷ் சார் எந்தவொரு வேலை பார்த்தாலும் சரியா பார்க்கனும் னு நினைப்பவர். அவர் அதை சரியா செஞ்சிட்டு வராரு.." என்றார்.
மேலும் பாடலாசிரியரும் இயக்குனருமான அருண் ராஜா காமராஜ் அவர்கள் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..