தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் ஜெயின் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தீராக் காதல். வருகிற மே 26 ஆம் தேதி தீராக் காதல் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கேட்டிருப்பது குறித்து ஜெய் பேசிய கலகலப்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத்துகளும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு அழகிய திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தத் தீராக் காதல் திரைப்படத்தை அதே கண்கள் மற்றும் பெட்ரோமேக்ஸ் படங்களின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் தீராக் காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஜெய் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள தீராக் காதல் படத்திற்கு ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில், பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். தீராக் காதல் படத்தில் ரிலீஸ்க்கு ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்ற வருகின்றன. அந்த வகையில், முன்னதாக தீராக் காதல் படத்திற்கான சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பேசியபோது, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக தளபதி விஜய் தனது திரை பயணத்தில் 68-வது படமாக நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தில் நடிப்பது குறித்து ஜெய் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது அஜித் குமாரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டது குறித்து ஜெய் பேசி இருக்கிறார்.

தற்போது நடைபெற்ற தீராக் காதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ஜெய் உடன் நடித்த நடிகர் நடிகைகள் படக்குழுவினர் குறித்தும், தீராக் காதல் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், தீராக் காதல் படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் குறித்து பேசிய போது, “நடிக்கும்போது அவர் எப்படி நடித்துக் காட்டுகிறாரோ அப்படியே நாம் பேச வேண்டும்.. லேசாக தலையை சாய்த்தால் கூட நேராக 90 டிகிரியில் வையுங்கள் என சொல்வார். “உங்களுடைய முன்னாள் காதலிடம் பேசும் போது கூட நீங்கள் இப்படித்தான் பேசுவீர்களா?” என கேட்பேன் அவ்வளவு பர்ஃபக்ட்டாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நானும் ஐஸ்வர்யா ராஜேஷும் அவரை கிண்டல் செய்து கொண்டே இருப்போம். ஆனால் படம் பார்க்கும்போது அதனுடைய தாக்கம் தெரிந்தது. மிகவும் அறிவுள்ள இயக்குனர் எங்கள் ரோஹின் டார்லிங், நான் செய்தியில் கூட படித்தேன் அடுத்து அஜித் அண்ணாவுடன் ஒரு படம் பண்ணப் போகிறார் என்று, “வாழ்த்துக்கள் சார் அதற்கு அந்த படத்தில் எனக்கு வில்லன் வாய்ப்பு கொடுங்கள்!”..” என கலகலப்பாக பேசினார். தீராக் காதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜெய் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.