பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்,சஞ்சனா நடராஜன்,ஜேம்ஸ் காஸ்மோ,அஸ்வந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படம் கொரோனா காரணமாக நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த படம் நேரடியாக Netflix தளத்தில் வெளியாகும் என்று படத்தின் டீஸர் ஒன்றுடன் படக்குழுவினர் தெரிவித்தனர்.இந்த படம் ஜூன் 18ஆம் தேதி முதல் Netflix தளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் சமீபத்தில் வெளியானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்றும் வகையில் இந்த ட்ரைலர் இருந்தது.தற்போது இந்த படத்திற்கு ட்விட்டர் எமோஜி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதனை பெரும் முதல் தனுஷ் படம் மற்றும் எட்டாவது தமிழ் படம் என்ற பெருமையை ஜகமே தந்திரம் பெற்றுள்ளது.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
#Suruli vandhutaru nu sollu. Emoji ah vandhutaru nu sollu!
— Netflix India (@NetflixIndia) June 3, 2021
Tweet with #JagameThandhiram
— Kolly Buzz (@KollyBuzz) June 3, 2021
#Suruli #LetsRakita #Rakita
#JagameThandhiramOnNetflix to unlock #JagameThandhiramEmoji!! @dhanushkraja @karthiksubbaraj @Music_Santhosh