Copyright Galatta.com. All rights reserved.
விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு, பிகில் போன்ற படங்களை தொடர்ந்து கதிர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஜடா. அறிமுக இயக்குநர் குமரன் இயக்குகிறார். இதில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். ரோஷினி நாயகியாகவும், யோகி பாபு, கார்த்திக் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். தற்போது ஒலாமிகா பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சத்யபிரகாஷ் பாடிய இந்த பாடல் வரிகளை சாம்.சி.எஸ் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் டப்பிங் பணிகள் சிறப்பாக முடிவடைந்தது.
ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசம்பர் 6-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதன் ஆடியோ லான்ச் நவம்பர் 27-ம் தேதி சென்னை பிரசாத் லாபில் நடைபெற்றது.