தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் இளம் கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம்-2 படத்தின் மூலம் பிரபலமாகிய இவருக்கு ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார் ஐஸ்வர்யா.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவை தவிர வேற எதற்கும் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட பின்னரும் வெளியே மக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பல திரைப்பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டும், சமூக ஊடகங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
அப்படியிருக்க நடிகை ஐஸ்வர்யா மேனனும் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்போது தளபதி விஜய்யுடன் டான்ஸ் ஆடுவதை பற்றி கேட்டதற்கு, அப்படி ஒன்று நடந்தால் அதுவே என் கனவு நிறைவேறிய தருணமாகும் என ஃபேன் கேள் தருணத்தை வெளிப்படுத்தினார்.