கொரோனா லாக்டவுனுக்னுக்கு பிறகு சுமார் ஓராண்டு கடந்து இந்திய மகளிர் அணி சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு செமயாய் ஆட்டம் போட்டுள்ளனர் இந்திய அணியின் வீராங்கனைகள்.
கிரிக்கெட் வீராங்கனைகள் வேதா கிருஷ்ணமூர்த்தி, அகன்க்ஷா, கோஹ்லி, திவ்யா, வனிதா விஆர், மமதா மபென் ஆகியோர் இந்திய அணியின் ஜெர்சியுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தல் ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோவை வேதா கிருஷ்ணமூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இந்த வீடியோவில் வாத்தி கம்மிங் என்று உச்சரிக்கும் போது, மமதா விஜய்யை போன்று கெத்தாய் நடந்து செல்கிறார். பிறகு வேதா கிருஷ்ணமூர்த்தி, அகன்க்ஷா கோஹ்லி, திவ்யா, மற்றும் வனிதா விஆர் ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலின் பிரபலமான ஸ்டெப்பை போடுகின்றனர்.
வாத்தி கம்மிங் பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடியுள்ளனர். இதேபோல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் தினேஷ் கார்த்திக் தலைமையில் சையது முஸ்தக் அலி ட்ரோஃபிக்காக தமிழ் நாடு அணி பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய போதும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங்க பாடலுக்கு நடனமாடினர். அந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்களை தளபதி ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.