உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார்.

விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் இதில் உள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை EVP பிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு முழுமூச்சில் நடந்து வருகிறது.

இந்தியன் தாத்தாவான சேனாபதியை வரவேற்க ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். தற்போது சென்னை EVP ஃபிலிம் சிட்டியில் நடக்கும் இரவு நேர படப்பிடிப்பு நடந்த வருகிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். மேலும் பின்னி மில்லில் செட் அமைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பொலிவியாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது.