நடிகர் பிரபாஸ் நடித்து கடந்த 2015 ம் ஆண்டு வெளியான ராஜமௌலியின் பாகுபலி படம் உலகளவில் இமாலாய வெற்றி பெற்று மிகப்பெரிய அங்கீகாரத்தை இந்திய சினிமாவிற்கு கொடுத்தது. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வசூல் சாதனை படத்து கவனம் பெற்றது. அதன்மூலம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மிகப்பெரிய புகழின் உச்சிக்கு சென்றனர். அதன்படி பாகுபலி படத்தின் கதாநாயகனாக நடித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் படத்தின் வெற்றிக்கு பின் பிரபாஸ் பான் இந்திய ஸ்டார் என்ற நிலைக்கு சென்றார்.

அதன்பின் மெகா பட்ஜெட் படங்களில் மட்டுமே பிரபாஸ் நடிக்க முடிவு செய்து அதன் மூலம் பான் இந்திய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அதன் மூலம் அவர் நடிப்பில் பாகுபலி க்கு பின் வெளியான ‘சாகோ’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெருமளவு அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன்பின் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்தார். மிக பிரம்மாண்டமாய் உருவான இந்த படமும் சரியாக போவாததால் தற்போது பிரபாஸ் பாகுபலி படம் போல் ஒரு வெற்றிக்கு காத்திருக்கின்றார். மேலும் தற்போது பிரபாஸ் அதிபுருஷ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் டீசர் நாடு முழுவதும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதனையடுத்து மீண்டும் ரீ எடிட் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் தற்போது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பிரபாஸ் தற்போது கே.ஜி.எப் பட இயக்குனர் பிராசாந்த் நீலுடன் கை கோர்த்து ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். மிகப்பிரம்மாண்டமாய் உருவாகி வரும இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2018 ம் தேதி பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்து வெற்றி பெற்ற 'நடிகையர் திலகம்' திரைப்படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கி வரும் 'Project K' படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். வைஜெயந்தி மூவீஸ் தயாரித்து வரும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் பாலிவுட் ஜாம்பவான அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியிடாமல் ரசிகர்களை ஒரு எதிர்பார்ப்பிலே வைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பார்வை ரசிகர்களை முன்னதாக கவர்ந்தது. அதன் பின் தீபிகா படுகோன் பிறந்தநாளையொட்டி ஒரு போஸ்டரை வெளியிட்டது.

அப்டேட் ஏதும் இல்லாமல் உருவாகி வரும் Project K திரைப்படம் உண்மையிலே நடைபெற்று வருகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் எழுப்பி வந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அட்டகாசமாக அறிவித்தது படக்குழு. அதன் படி வரும் 2024 ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி Project K வெளியாகவுள்ளதாக அசத்தலான போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு.

இதனையடுத்து Project K திரைப்படத்தின் இந்த அறிவிப்பு தற்போது நாடு முழுவதும் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. நிச்சயம் இந்த திரைப்படம் பிரபாஸ் ரசிகர்களை திருப்திபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.