நாளை ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2 ’. மிகப்பெரிய பொருட்செலவில் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களின் நடித்துள்ளனர். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெற்றது. மேலும் முதல் பாகத்தின் படி இரண்டாம் பாகத்திற்கு தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்கான முன்பதிவில் மும்முரமாக இறங்கியுள்ளனர். ஒருபுறம் படக்குழு படத்திற்கான இறுதிகட்ட விளம்பர வேலையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற சோழா சோழா பாடலை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம் பெற்றுள்ள தாய்தின்ற மண்ணே பாடலுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசிய விமர்சனத்திற்கு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பகிர்ந்த தகவல்,
"ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தன்மை என்று ஒன்று உள்ளது 'சோழா சோழா' பாடலுக்கு ஒரு தனித்தன்மை உண்டு ‘தாய்தின்ற மண்ணே’ பாடலுக்கு ஒரு தனி தன்மை உண்டு. நாம் அதை அதனுடைய அழகியல் உள்ளே தான் ரசிக்க வேண்டும். ஒரு பாடல் நம்மிடம் இருக்கு என்றால் அந்த பாடலுக்கு ஒரு தனி அழகியல் இருக்கு.. அதை அந்தளவு தான் ரசிக்க வேண்டும். நீங்க இதை எடுத்துட்டு போய் இன்னோரு பாடலோடு ஒப்பிடுவது அது தேவையில்லாதது என்றுதான் சொல்வேன்" என்றார் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.
கடந்த 2O10 இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான நவீன போரை சார்ந்து உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக காலம் கடந்து இருந்து வருகிறது.
மேலும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..