ஆரம்பத்தில் தமிழில் சுயாதீன இசைக் கலைஞராக தனது பாடல்களின் மூலம் தமிழ் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, தொடர்ந்து தமிழ் திரையுலகிலலும் இசையமைப்பாளராக பல ஃபேவரட் பாடல்களை கொடுத்து வருவதோடு தொடர்ந்து கதாநாயகனாகவும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு முன்னதாக ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் வெளிவந்த சிவகுமாரின் சபதம் திரைப்படம் இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள அன்பறிவு திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி முதல் முறையாக அன்பு-அறிவு என டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து காஷ்மிரா பரதேசி & ஷிவானி ராஜசேகர் கதாநாயகிகளாக நடிக்க, நெப்போலியன், ஆஷா சரத், விதார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி அன்பறிவு திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் அன்பறிவு படத்திலிருந்து அன்பே அறிவு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அன்பே அறிவு வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.