பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவரது உதவியாளராக இருந்து பின் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. முதல் படத்திலே மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் சினிமாவை ஆச்சர்ய பட வைத்தவர். பின் இரண்டாவது படத்திலே தளபதி விஜயின் கூட்டணி அமைந்து மிரட்டலான ‘தெறி’ திரைப்படம் வெளியானது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த தெறி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தளபதி விஜயுடன் கூட்டணி அமைத்தார் இயக்குனர் அட்லீ. அதன்படி மெர்சல், பிகில் என்று மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் படங்களை அட்லீ கொடுத்தார்.

அதன்பின் இயக்குனர் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் அவர்களை இயக்க போவதாக தகவல் கசிந்தது. பின் நாளில் அட்டகாசமான முன்னோட்டத்துடன் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகபெரிய வரவேற்பை பெற்று கடந்த சில ஆண்டுகளாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி இயக்குனர் அட்லீயின் முதல் இந்தி படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் ஷாருக் கான் நடிக்கும் இப்படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய பேச்சு இருந்து வருகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி களம் இறங்குகிறார். மேலும் படத்தில் பிரியாமணி, யோகிபாபு, சானியா மல்கோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்து வருகின்றனர் மேலும் அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிகட்ட படப்பிடிப்பில் தற்போது இறங்கியுள்ள நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை அட்டகாசமான வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. வித்யாசமான உருவத்துடன் ஈட்டி எரியும் ஷாருக் கான் உடன் அமைந்துள்ள வீடியோவில் ஜவான் திரைப்படம வரும் செப்டம்பர் 7 ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவினை தற்போது ரசிகர்கள் உற்சாகத்தில் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். விரைவில் ஜவான் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.