இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 67’. பிரபல தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து இரண்டு நாட்கள் வெளியாகிய நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் தளபதி 67 படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
பொதுவாகவே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் ஒருவரான தளபதி விஜயின் திரைப்படங்கள் திரையரங்குகளில் கூட்டம் அலைமொதினாலும் அந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அதற்கென்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. அதனாலே தளபதி விஜய் படங்களின் தொலைக்காட்சி உரிமம் வாங்குவதில் அதிகம் போட்டி நிலவும். அப்படி இதற்கு முன் தாசப்தம் முதல் இன்று தளபதி 67 வரை தளபதி விஜய் திரைப்படங்கள் எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் எந்தெந்த திரைப்படங்களை வைத்துள்ளது என்பதை வழங்குகிறது இந்த தொகுப்பு.
1. காவலன் (2011)
இயக்குனர் : சித்திக்
நடிகர்கள் : விஜய், அசின், வடிவேலு, ராஜ்கிரண்
இசை :வித்யாசாகர்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
டிஜிட்டல் : சன் நெக்ஸ்ட்
2. வேலாயுதம் (2011)
இயக்குனர் : மோகன் ராஜா
நடிகர்கள் : விஜய், ஹன்சிகா, ஜெனிலியா, சந்தானம், சூரி
இசை :விஜய் ஆண்டனி
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : ஜெயா தொலைக்காட்சி
3.நண்பன் (2012)
இயக்குனர் : சங்கர்
நடிகர்கள் : விஜய், ஜீவா, ஸ்ரீ காந்த், சத்யராஜ், இலியானா
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : விஜய் தொலைக்காட்சி
4. துப்பாக்கி (2011)
இயக்குனர் : ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகர்கள் : விஜய், காஜல் அகர்வால், வித்யுத் ஜமால், ஜெயராம்
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : விஜய் தொலைக்காட்சி
5. தலைவா (2013)
இயக்குனர் : விஜய்
நடிகர்கள் : விஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம்
இசை :ஜி.வி.பிரகாஷ் குமார்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
6. ஜில்லா (2014)
இயக்குனர் : நேசன்
நடிகர்கள் : விஜய், காஜல் அகர்வால் , ஜெனிலியா, சந்தானம், சூரி
இசை :டி. இமான்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
7. கத்தி (2014)
இயக்குனர் : ஏ ஆர் முருகதாஸ்
நடிகர்கள் : விஜய், சமந்தா, சதீஷ்
இசை :அனிரூத்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : ஜெயா தொலைக்காட்சி
8. புலி (2015)
இயக்குனர் : சிம்பு தேவன்
நடிகர்கள் : விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, பிரபு,ஸ்ரீ தேவி
இசை :தேவி ஸ்ரீ பிரசாத்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
9.தெறி (2016)
இயக்குனர் : அட்லீ
நடிகர்கள் : விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், மகேந்திரன்
இசை :ஜிவி பிரகாஷ் குமார்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
10. பைரவா (2011)
இயக்குனர் : பரதன்
நடிகர்கள் : விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜகபதி பாபு
இசை :சந்தோஷ் நாராயணன்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
11. மெர்சல் (2017)
இயக்குனர் : அட்லீ
நடிகர்கள் : விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு, சத்யராஜ் மற்றும் எஸ் ஜே சூர்யா
இசை :ஏ.ஆர் ரஹ்மான்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : ஜீ தொலைக்காட்சி
12. சர்க்கார் (2018)
இயக்குனர் : ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகர்கள் : விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார்
இசை :ஏ ஆர் ரஹ்மான்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
13.பிகில் (2019)
இயக்குனர் : அட்லீ
நடிகர்கள் : விஜய், நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷராவ், கதிர்
இசை :ஏ.ஆர் ரஹ்மான்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
14. மாஸ்டர் (2021)
இயக்குனர் : லோகேஷ் கனகராஜ்
நடிகர்கள் : விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்,
இசை :அனிரூத்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
15. பீஸ்ட் (2022)
இயக்குனர் : நெல்சன் திலீப் குமார்
நடிகர்கள் : விஜய், பூஜா ஹெக்தே, யோகி பாபு, செல்வராகவன்
இசை :அனிரூத்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
16. வாரிசு (2023)
இயக்குனர் : வம்சி பைடிபள்ளி
நடிகர்கள் : விஜய், ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ்
இசை : தமன்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி
17. தளபதி 67 (2022)
இயக்குனர் : லோகேஷ் கனகராஜ்
நடிகர்கள் : விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத்
இசை :அனிரூத்
உரிமம் பெற்ற தொலைக்காட்சி : சன் தொலைக்காட்சி