தமிழ் சினிமாவில் சமீபத்தில் இசையமைப்பாளர்கள் போட்டி போட்டி தங்களது படங்களின் பட்டியலை நீட்டி கொண்டே வருகின்றனர். அந்தவகையில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அனிருத் கைவசம் சுமார் 20 க்கும் திரைப்படங்கள் கைவசம் உள்ளது. ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை இந்த இரண்டு இசையமைப்பாளர்கள் தான் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். மற்ற இசையமைப்பாளர்கள் வழக்கத்தின் படி இசையமைத்து வருகின்றனர். பெரிய நட்சத்திரங்கள் படங்களை ஏஆர் ரஹ்மான், அனிருத், ஜிவி பிரகாஷ் கைப்பற்ற சிறிய நட்சத்திரங்கள் அல்லது சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் முழுக்க முழுக்க ஒருவரை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் சாம் சிஎஸ். விக்ரம் வேதா திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாம் சி எஸ்ஓர் இரவு படத்தின் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதன்படி அவர் இசையில் வெளியான ‘கைதி, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்,’கைதி’, ‘நோட்டா, இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற பல படங்கள் மக்களின் பெரும் ஆதரவை பெற்றது. படங்களில் பாடல்கள் வரவேற்பை விட அப்படத்தின் பின்னணி இசை காலம் கடந்து பேசப்படும். சுமாரான காட்சியையும் பார்வையாளர்களை கவரும் அளவு பின்னணி இசை கொடுத்து அட்டகாசமான காட்சியாக மாற்றக்குரியவர் சாம் சி எஸ். சிறிய பட்ஜெட் படமோ பெரிய பட்ஜெட் படமோ எந்த பிரிவு படமாக இருந்தாலும் அதில் சாம் சி எஸ் ன் அளவுகடந்த உழைப்பு அந்த படத்தை சற்று உயர்த்தி காட்டும். அதன்படி இந்த ஆண்டு மட்டுமே இவரது இசையில், ‘ரன் பேபி ரன், ‘தக்ஸ்’, ‘மைக்கேல்,’பகாசூரன்’, ‘அகிலன், ‘கொன்றால் பாவம் ஆகிய படங்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் அவர் இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்த ஒரு பார்வையே இந்த சிறப்பு தொகுப்பு

டிமாண்டிகாலனி 2

திருவின் குரல்

பார்டர்

ருத்ரன்

D147 (மலையாளம்)

கார்டியன்

ரைடு

தமிழ் குடிமகன்

யாருக்கும் அஞ்சேல்

Two Stroke (Malayalam)

சூர்பனகை / நேனேனா

Flash Back

சலூன்

கோஸ்ட்டி

ரெட் சாண்டல்வுட்


பந்தரா (மலையாளம்)

வேலா (மலையாளம்)

தி ரோடு

பெல்பாட்டம்

ரெடி பேபி (மலையாளம்)

ஆர் டி எக்ஸ் (மலையாளம்)

கண்ணாமூச்சி

கடவுள் சகாயம் நடனசபா (மலையாளம்)

லவ்