பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக திகழும் ஜீவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இடிமுழக்கம், 13, கள்வன், டியர், ரெபல் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் ஏண்டா தலையில எண்ண வைக்கல மற்றும் திட்டம் இரண்டு ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் அடியே. ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகை கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் அடியே திரைப்படத்தில் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர். மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வித்தியாசமான மல்டிவெர்ஸ் கான்செப்டில் பக்கா என்டர்டைனிங் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த அடியே திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவில், முத்தையன்.U படத்தொகுப்பு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி அடியே திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த ஜீவி பிரகாஷ் அவர்கள் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை கலகலப்பாக பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, "தமிழ் படம்" பார்த்தீர்கள் என்றால் அது ஒரு SPOOF படம்.. அந்தப் படம் வந்தபோது மற்ற படங்களை கலாய்த்து எடுக்கப்பட்டிருந்தது. அதை வைத்து யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என சொல்லப்பட்டது. ஆனால் இதில் கலாய்ப்பது மாதிரி இல்லை ஆனாலும் மற்ற படங்கள் மற்ற சில விஷயங்களை எல்லாம் மாற்றி சொல்வதால் யாராவது தவறாக எடுத்துக் கொள்வார்களா?” எனக் கேட்டபோது, “அப்படி யாராவது தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்றால் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் நம்பர் தருகிறேன், அவனைக் கூப்பிட்டு சட்டையை பிடித்து கேளுங்கள். நான் எழுத்தாளர் கிடையாது. நான் அந்த படத்தின் இயக்குனர் கிடையாது. கதையை நான் எழுதவில்லை வசனங்களை நான் எழுதவில்லை. அவர்கள் எழுதிய வசனங்களை நான் பேசினேன். எழுதியவன் இருக்கிறான் பார்த்தீர்களா? அவனுடைய நம்பர் தருகிறேன் தயவுசெய்து அவனிடம் பேசிக் கொள்ளுங்கள்.” என பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம் பேசும் போது, “நீங்கள் நடித்திருக்கிறீர்களே என யாராவது கேட்டால்?” என்ன கேட்டபோது, “நான் நடித்தேன் தான் நான் இல்லை என சொல்லவில்லை. ஆனால் வசனத்தை நான் பேசியிருக்க மாட்டேன். அந்த சூழ்நிலையில் நான் இருந்திருப்பேன்.” என பதிலளித்தார். மேலும் அவரிடம், “படப்பிடிப்பின் போது ஏதாவது சில காட்சியில் இந்த மாதிரி பிரச்சனை ஏதாவது வந்து விடுமா பஞ்சாயத்து ஆகிவிடும் போல் இருக்கிறதே மாட்டி விட்டு விடாதே! என இயக்குனரிடம் கேட்டு இருக்கிறீர்களா?” என கேட்டபோது, “இருக்கு இன்னும் ஒரு சில தினங்களில் எல்லாம் வெளியில் வர ஆரம்பித்து விடும்” என கலகலப்பாக பேசினார். ஜிவி பிரகாஷ் குமாரின் அடியே படத்தின் கலக்கலான அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.