இந்தாண்டின் முதல் பெரிய படமாக போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் மற்றும் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 11ம் தேதி வெளியாகவிருக்கின்றது. இரு படங்களின் பாடல்கள் டிரைலர்கள் முன்னதாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் கோலாகலமாக இரு படங்களையும் வரவேற்றும் வரும் நிலையில் அடுத்தடுத்த நாளுக்கான காட்சிகளை முன்பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும் பொங்கலையொட்டி வெளிவரவிருப்பதால் ரசிகர்களின் படையெடுப்பு திரையரங்குகளை நோக்கி உள்ளது. மேலும் பல இடங்களில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் மற்றும் அதற்கேற்ற கொண்டாட்டங்களுக்கான மும்முரமான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாரிசு, துணிவு ஆகிய படங்கள் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இவ்விரு படங்களுக்குமான ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும் திரையரங்கு வழக்கங்களில் உயரமான கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து விஜய் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து இணையத்திலும் பேசி வருகின்றனர். அஜித் விஜய் படங்கள் பொங்கல் பண்டிகையொட்டி வருவதால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திரையரங்குகளில் படையெடுப்பு குறையாமல் கல்லா கட்டும். இந்நிலையில் அரசின் இந்த உத்தரவு பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான இறுதி கட்ட வேலை நடைபெற்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் ரசிகர்களின் கொண்டாட்டம் தீவிரமாக இருக்கும். எந்தவொரு வகையிலும் பொதுமக்களை பாதிக்காதவாறு இந்த பொங்கல் பண்டிகை அமைய வேண்டும் என்பதை பொருட்டு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு என்று இன்னொரு புறம் இந்த உத்தரவை வரவேற்றும் வருகின்றனர். என்ன இருந்தாலும் நாளை திரையரங்குகள் திருவிழா கோலமாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகம் இல்லை.