உலகப் புகழ்பெற்ற ஒரு பேலஸில் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் பாடல் கம்போசிங் பணிக்காக தயாரிப்பாளர் K.T.குஞ்சுமான், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் MM.கீரவாணி ஆகியோர் இணைந்து இருப்பதாக தற்போது அறிவிப்பு வந்துள்ளது. இந்திய சினிமாவில் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக தனித்து நிற்பவர் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன். கேரளாவை பூர்விகமாக கொண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் அவர்கள் ஆரம்ப கட்டத்தில் மலையாளத்தில் தொடர்ச்சியாக பல படங்களை தயாரித்தார். பிறந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த வசந்தகால பறவை படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கிய K.T.குஞ்சுமோன் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு மீண்டும் இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூரியன் திரைப்படத்தையும் தயாரித்தார்.
அடுத்ததாக 1993 ஆம் ஆண்டு தற்போதைய இந்திய சினிமாவில் பல இயக்குனர்களுக்கு முன்னோடியாகவும் பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்கும் நட்சத்திர இயக்குனராகவும் திகழும் இயக்குனர் ஷங்கர் அவர்களின் முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படம் K.T.குஞ்சுமோன் அவர்கள் தயாரித்தது தான். தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் ஷங்கருடன் இணைந்த K.T.குஞ்சுமோன் ஷங்கரின் இரண்டாவது படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான காதலன் திரைப்படத்தையும் தயாரித்தார். பின்னர் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தரமான காதல் படங்களை கொடுத்த இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தை தயாரித்த K.T.குஞ்சுமோன் தொடர்ந்து நாகார்ஜுனா நடிப்பில் தயாரான ரட்சகன் திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கினார். கடைசியாக கடந்த 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நிலாவே வா மற்றும் என்றென்றும் காதல் ஆகிய படங்களை தயாரித்த K.T.குஞ்சுமோன் அவர்கள் பின்னர் திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்தியிருந்தார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை தயாரிப்பதாக K.T.குஞ்சுமோன் அவர்கள் அறிவித்தார். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் தயாரிப்பாளராக மாஸ் என்ட்ரி கொடுக்கும் K.T.குஞ்சுமோனின் இந்த ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை இயக்குனர் A.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். நடிகர் சேர்த்தன் சீனு கதாநாயகனாக நடிக்கும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் பிரபலமான நடிகைகளான நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் பிரியா லால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சென்ட் அவர்கள் ஒளிப்பதிவு செய்யும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி அவர்கள் பணியாற்ற இருப்பதாக தெரிகிறது. மேலும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்திற்கு சமீபத்தில் இயக்குனர் SS.ராஜமௌலி அவர்களின் RRR திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற இசை அமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் இசையமைக்கிறார் வைரமுத்து அவர்கள் பாடல்களை எழுதுகிறார். இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற போள்காட்டி பேலஸில் தற்போது ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் பாடல் கம்போசிங் பணிகளுக்காக இசையமைப்பாளர் கீரவாணி பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் K.T.குஞ்சுமோன் ஆகியோர் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…