கடந்த 2010 ல் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. காதலை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடிக்க திரிஷா கதாநாயாகியாக நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் இவர்களுடன் விடிவி கணேஷ், பாபு ஆண்டனி, கிட்டி உள்ளிட்டோர் நடித்தனர். ஆர் எஸ் என்டர்டெயின்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இணைந்து தயாரித்து வெளியிட்ட இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருப்பார். தமிழில் கிடைத்த வரவேற்பையடுத்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை இப்படத்திற்கான ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இன்றும் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்தால் இப்படத்திற்கான கூட்டம் வரவேற்பை கொடுத்து வருகிறது. 13 ஆண்டுகள் கழிந்தும் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் குறித்து அப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டவை,

"தமிழ் ல ஸ்கிரிப்ட் ல ஒரு மாதிரி இருந்தது. அப்பறம் தமிழ் ல பண்ணல. இந்தியில அதை பண்ணேன். தமிழ்ல அதை பண்ணாததால தெலுங்கு மொழியிலையும் பண்ணல.. கால் பண்ணிட்டே இருப்பாங்க கார்த்திக் எடுக்க மாட்டார். சரி வீட்ல பொய் சொல்லிட்டு கோவாவிற்கு கிளம்பி வந்துடுறாங்க.. கஷ்டப்பட்டு பயணம் செஞ்சு வராங்க.. கோவா ல போய் அங்க தேடி கிடைக்காம இருக்கும் அப்பறம் ஜெஸி அவன தேடி ஹோட்டல் போக அங்க எதார்த்தமா கார்த்திக் அ ஒரு பொண்ணு பேசிட்டே ரூம்க்குள்ள இழுத்துட்டு போறா. அப்பறம் ரூம் கதவு மூடிடும் உள்ள வந்ததும் கார்த்திக் அந்த பொண்ணு கூட பேசுறா மாதிரி இருக்கும். அந்த பொண்ணு அவன விருப்புறனு சொல்லும் அவன் வேண்டாம் னு வந்துடுவான். ஆனா ஜெஸி பார்த்தது வேற.. அதனால் அவ கிளம்பி போயிடுவா..

எனக்கு என்னென்னா அது ரொம்ப பழைய கதையா ஆகிடுமோனு யோசிச்சு அதை பண்ணல.. இந்தியில இந்த கதையில கொஞ்சம் மாத்தி பண்ணோம்." என்றார் கௌதம் மேனன்.

மேலும் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் முழு வீடியோ உள்ளே..