தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், இயக்குனர் NS.பொன் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். PEN STUDIOS வழங்கும் பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்கள் உடனான நேர்காணலில் பேசிய கௌதம் கார்த்திக் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், சிலம்பரசன்.TR அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது என கேட்டபோது,

"STR அண்ணே ஒரு சகலகலா வல்லவன்... படட்பிடிப்பு தளத்தில் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் அவரை பார்க்கவே முடியாது. ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒரு கதாபாத்திரமாகவே இருப்பார். பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு பெரிய இடைவேளை கிடைத்தது அப்போது அவரோடு பேசியபோது திடீரென அவர் சில கதைகள் சொல்ல ஆரம்பித்தார். அப்போது முழுவதும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியில் வந்து கதைகளை சொன்னார். ஒரு மனிதனால் திடீரென கதைகளுக்குள் செல்லும்போது உடனடியாக அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள முடிகிறது. அப்படி என்றால் அதற்கு தயாராக நிறைய மெனக்கெடல் ஏற்கனவே இருக்கும் என புரிந்தது. அந்த கதைகள் அனைத்தும் அவர் அடுத்து இயக்க இருக்கக்கூடிய திரைப்படங்களாக இருக்கலாம். ஆனால் அவற்றை சொல்லும்போது அதற்காக முழுவதுமாக தயாராகி இருக்கிறார். அதற்கு ஏற்றபடி அவர் மிகுந்த நம்பிக்கையோடும் இருக்கிறார். அவருக்கு தெரிகிறது அவர் என்ன செய்கிறார் என்று, மனரீதியாக அதற்கு மிகவும் தயாராகிவிட்டார். அவர் இந்த அளவுக்கு தயாராகும் விதத்தை என்னவென்றே சொல்ல முடியாது. என பதில் அளித்தார்." தொடர்ந்து, இப்போது இருக்கும் புதிய நடிகர் சிலம்பரசன்.TR குறித்து பேசியபோது, "எனக்கு ட்ரான்ஸ்ஃபர்மேஷனுக்கு முன்பு பின்பு இருந்த இரண்டு சிலம்பரசன்TRம் தெரியும். ஒன்று மட்டும் சொல்கிறேன் முன்போ பின்போ எப்போதும் அவர் அசாத்திய திறமைசாலி... எனக்கு தெரிந்து மிகவும் நேர்மையான மனிதர்களில் ஒருவர். மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிடுவார். வைப்பதற்கு எதுவுமே இருக்காது. கொஞ்சம் கூட போலித்தனம் இருக்காது. இந்த விஷயத்தை நான் மிகவும் பாராட்டுவேன். அதனால் தான் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது." என பதிலளித்துள்ளார். மேலும் பத்து தல திரைப்படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் பேசிய கௌதம் கார்த்திக்கின் அந்த முழு பேட்டி இதோ…