தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் சேரன் இணைந்து நடித்து வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு அழகிய குடும்ப திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை அடுத்து இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பத்து தல திரைப்படத்தில் தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வரிசையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் எழில் இயக்கத்தில் முதல் முற்றிலும் மாறுபட்ட த்ரில்லர் படமாக உருவாகும் யுத்த சத்தம் படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.
மேலும் கதாநாயகியாக சாய்பிரியா தேவா நடிக்க ரோபோ ஷங்கர் மனோபாலா வையாபுரி சாம்ஸ் அஸ்வின் ராஜா. குருதேவ் ஒளிப்பதிவில் டி இமான் இசையமைத்துள்ள யுத்த சத்தம் படத்தை கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் யுத்த சத்தம் படத்தில் இருந்து டி.இமான் இசையில் பாடகர் சிட் ஸ்ரீராம் பாடியுள்ள தைலாங்குருவி பாடல் ப்ரோமோ தற்போது வெளியானது. அந்த பாடல் ப்ரோமோ வீடியோ இதோ…