இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு அழகிய குடும்ப திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பத்து தல திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல சூப்பர் ஹிட் ஃபேமிலி என்டர்ட்டைனிங் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் எழில் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் யுத்த சத்தம் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் யுத்த சத்தம் படத்தில் சாய்பிரியா தேவா கதாநாயகியாக நடிக்க ரோபோ ஷங்கர் மனோபாலா வையாபுரி சாம்ஸ் அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவில் டி இமான் இசையமைத்துள்ள யுத்த சத்தம் படத்தில் இருந்து ரொமான்டிக்கான தைலாங்குருவி பாடல் தற்போது வெளியானது. தைலாங்குயில் பாடல் இதோ…