மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது இந்திய அளவில் பல கோடி ரசிகர்களுக்கும் ஃபேவரட் நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் நடிப்பில் அதிரடியான கேங்ஸ்டர் திரைப்படமாக தற்போது தயாராகி வருகிறது கிங் ஆஃப் கோத்தா. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக களமிறங்கிய ஹே சினாமிக்கா எனும் தமிழ் படம், காவல்துறை அதிகாரியாக நடித்த சல்யூட் எனும் மலையாள படம், ராணுவ அதிகாரியாக நடிக்க, அழகிய காதல் படமாக வந்த சீதாராமம் எனும் தெலுங்கு படம் மற்றும் இயக்குனர் பால்கி இயக்கத்தில் வெளிவந்த சுப் ரிவெஞ் ஆப் தி ஆர்டிஸ்ட் எனும் ஹிந்தி படம் என நான்கு மொழிகளில் துல்கர் சல்மான் நடித்த நான்கு திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக வந்து மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றன.
இது போக ஃபேமிலி மேன் & ஃபர்சி வெப் சீரிஸ்களின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் விரைவில் நெட்ஃபிலிக்ஸில் வெளிவர இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிசிலும் முன்னணி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். ஹிந்தியில் தயாராகி இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் பக்கா அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி வருகிறது கிங் ஆப் கோத்தா. இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் கிங் ஆப் கோத்தா படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, செந்தில் கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் ஷர்மா மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக அசத்திய சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை ரித்திகா சிங் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்க, ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை சேர்த்துள்ளார். துல்கர் சல்மானின் குருப், சீதாராமம் திரைப்படங்களை தொடர்ந்து கிங் ஆஃப் கோத்தா திரைப்படமும் மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக வெளிவர இருக்கிறது. இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை பரிசாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. காரைக்குடியில் தொடர்ச்சியாக 95 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்து இருக்கும் நிலையில், கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைக்கான உரிமத்தை சோனி மியூசிக் சௌத் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. அந்த அறிவிப்பு இதோ…