தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர், கேப்டன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்.இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார் விஜயகாந்த்.நடிப்பில் மட்டுமின்றி நடிகர் சங்க தலைவர் போன்ற பதவிகளிலும் விஜயகாந்த் இருந்துள்ளார்.
நடிகராக இருந்த போதே பலருக்கும் பல உதவிகளை செய்த விஜயகாந்த் , பல மக்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.2005-ல் அரசியலில் அடியெடுத்து வைத்தார் விஜயகாந்த்,தனது தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை மதுரையில் தொடங்கினார் விஜயகாந்த்.2006-ல் விஜயகாந்த் போட்டியிட்ட தொகுதியில் அமோக வெற்றியை பெற்றார்.
தொடர்ந்து 2011-ல் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக முன்னேறினார் விஜயகாந்த்.ஆளும்கட்சியின் கூட்டணியில் இருந்தாலும் அவர்களை எதிர்த்து தைரியமாக பேசி மக்கள் மனதில் இடம்பிடித்தார் விஜயகாந்த்.சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக சமீபகாலமாக அவர் அரசியல் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்த சிகிச்சையில் பூரண குணமடைந்த விஜயகாந்த் தனது கட்சி சார்ந்த சில முக்கிய நிகழ்ச்சிகளிலும்,தொண்டர்களின் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.விஜயகாந்தின் சில வீடியோக்கள் மட்டும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.2021 தேர்தல் வருவதால் விஜயகாந்தை மீண்டும் அரசியல் மீட்டிங்களில் பார்க்க மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
கேப்டன் விஜயகாந்துக்கு கடந்த 25-ம் தேதி பிறந்த நாள் நிறைவடைந்தது. இந்நிலையில் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது தீவிர ரசிகரான துரைப்பாக்கம் கணேஷ் நகரை சேர்ந்த சின்ன கேப்டன் (எ) வெற்றிவேல் , நேற்றிரவு 12 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றுள்ளார்.வெற்றிவேல் அளவுக்கதிகமான மதுபோதையில் இருந்ததால் விஜயகாந்த் வீட்டின் காவலாளி, அவரை உள்ளே அனுமதிக்காமல் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.விஜயகாந்தை பார்க்கமுடியாததால் கோபமடைந்த வெற்றிவேல் விஜயகாந்த் வீட்டுக்கு எதிர்புறம் நின்றிருந்த காரின் கண்ணாடியை கையால் குத்தி உடைத்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.