இந்தியாவின் ஆகச்சிறந்த ஒடிடி தளமாக இன்று திகழ்ந்து வரும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள இதுவரை திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்சிகள். விளையாட்டு என்று பன்முக சுவையுடன் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்திய அளவில் பல மொழிகளில் மக்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பல வெற்றிகரமான செயல்களை இதுவரை கொடுத்து வருகிறது. அதன்படி இதுவரை 8 மொழிகளில் 1 லட்சம் தொலைக்காட்சி நிகழ்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழிகளை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் புது முயற்சியினை கையிலெடுத்து ஆதை சாதிப்பது மட்டுமல்லாமல் அதில் முன்ன்மாதிரியாகவும் இருந்து வருகிறது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளம். அதன்படி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் மிகப்பெரிய வெற்றி படமான கனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். திரையில் பாடகராகவும் பாடலாசிரியராகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்த அருண்ராஜா காமராஜ் தன் முதல் படத்திலே மிகப்பெரிய ஹிட் கொடுத்து ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றார். பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற சமூக அக்கறை கொண்ட விறுவிறுப்பான திரைப்படத்தை கொடுத்து மீண்டும் கவனத்தை ஈர்த்தார். அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் வழங்கும் புதிய தொடரை அருண் ராஜா காமராஜ் இயக்கவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த தொடருக்கு ‘லேபிள்’ என்று தலைபிடப்பட்டுள்ளது.இந்த தொடரின் கதையயை எழுத்தாளர் ஜெயசந்திரன் ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். மேலும் சமூக கருத்துகள் கொண்ட குறும்படங்களை இயக்கி சர்வதேச விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் நடிகர் ஜெய் மற்றும் தன்யா ஹோப் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடிக்கவுள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்க ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் பி ஒளிப்பதிவு செய்கிறார்.மேலும் தொடரில் பாடலாசிரியர்கள் யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் என நான்கு பாடலாசிரியர்கள் இத்தொடருக்கான பாடல்களை எழுதியுள்ளனர்.
தமிழில் முன்னதாக நிறைய நல்ல நல்ல தொடர்கள் வந்தவண்ணம் உள்ளது. அதிரடி ஹிட் கொடுக்கும் தமிழ் தொடர்களின் வரிசையில் லேபிள் தொடரும் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர்.