தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் வரிசையில் வலம் வரும் இயக்குனர் சுந்தர் சி. 90 களில் இயக்குனராக அறிமுகமாகி இன்று வரை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப பல படங்களை இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன் என்று திரையுலகின் முன்னணி நடிகர்களை இயக்கியது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களில் நடிப்பதும் இயக்குவதுமாக இருந்து வரும் சுந்தர் சி இன்று வரை வெற்றி இயக்குனராக தமிழ் திரையுலகில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தான் நடித்து வெளியாகவிருக்கும் தலைநகரம் 2 திரைப்படம் குறித்தும் தன் திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார், இந்த பேட்டியில் அரண்மனை 1,2,3 படங்களின் வெற்றி தோல்வி நிலவரம் குறித்து கேட்கையில்,

"கொஞ்சம் நாள் முன்னாடி ஒரு செய்தியில் அரண்மனை 3 படம் ஆர்யாவிற்கு தோல்வி படம் னு சம்பதமே போட்டிருந்தாங்க.. இதுல உண்மை என்பது வேறு எழுதப்படுவது ஒன்று.. உதாரணமாக நான் இத்தனை வருஷம் இத்தனை படம் பண்ணிருக்கேன். அரண்மனை 3 படம் தான் முதல்முறையா எனக்கு ஓவர் வந்த படம்.

ஓவர் னா நம்ம ஒரு விலைக்கு படத்தை விற்றுவிடுவோம். அந்த படம் நல்லா போய் அதிகமா வசூல் படச்சதும் விநியோகஸ்தர் நமக்கு கொடுக்குறது. அது சினிமா துறையில் அத்திபூ பூக்குற மாதிரி.. 28 வருஷத்துல எனக்கு முதல் முறை ஓவர் வந்த படம் இது..

தொலைக்காட்சியில் மக்கள் வெற்றி படம் னு சொல்லி கொண்டாடுனா 2 படங்களுடன் அரண்மனை 3யும் ஒளிப்பரப்பானது. அந்த 2 படங்கள் சேர்ந்து வாங்குன TRP ய விட அரண்மனை 3 TRP அதிகம். திரையரங்குகளில் மக்கள் பார்த்து முடிவு பன்றதுதான் முக்கியம். 4 பேர் எழுதுறத வெச்சி வெற்றி தோல்வி முடிவு செய்ய‌முடியாது. எனக்கு திரையரங்கில் கள நிலவரம் வைத்து தான் நான் அதை தீர்மானிப்பேன்.” என்றார் இயக்குனர் சுந்தர் சி.

சுந்தர் சி இயக்கத்தில் 2021 ல் வெளியான திரைப்படம் அரண்மனை 3. குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த அரண்மனை 1,2 படத்தின் டைட்டிலை கொண்டு மாறுபட்ட கதைகளத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 திரைப்படம் ரசிகர்களால் பரவலாக கொண்டாடப்பட்டது இப்படத்தில் சுந்தர் சி, ஆண்ட்ரியா, ஆர்யா, ராஷிகன்னா, விவேக், சூரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தன் திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே...